பொது செய்தி

தமிழ்நாடு

திருவான்மியூர் மார்க்கெட் திறக்கப்படுமா?

Added : மே 13, 2020
Share
Advertisement

திருவான்மியூர் : திருவான்மியூர் மார்க்கெட்டை இரண்டாக பிரித்து, குறிப்பிட்ட கடைகளை, மாட வீதிகளில் துவங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

திருவான்மியூர் மார்க்கெட்டில், 105 கடைகள் உள்ளன. இங்குள்ள வியாபாரிகள், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறி, பழம் வாங்கி வந்து வியாபாரம் செய்கின்றனர்.திருவான்மியூர் மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் காய்கறி வாங்கிய மக்கள் என, 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதித்தது.இதையடுத்து, கடந்த, 3ல், திருவான்மியூர் மார்க்கெட் மூடப்பட்டது. எல்.பி., சாலை, திருவான்மியூர் சிக்னலின் தெற்கு பக்கமுள்ள, சாலையின் இருவழி பாதையை, தற்காலிக மார்க்கெட்டாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ஊரடங்கு தளர்வு காரணமாக, வாகன போக்குவரத்து அதிகரித்ததால், இந்த இடத்தில் மார்க்கெட் துவங்கினால், திருவான்மியூர் - தரமணி சிக்னலில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், போலீசார் மார்க்கெட் துவங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், மார்க்கெட் கடைகளை இரண்டாக பிரிக்க, மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி, பாதி கடைகள் திருவான்மியூர் மார்க்கெட்டிலும், மீதமுள்ள கடைகள் மருந்தீஸ்வரர் கோவிலை ஒட்டி உள்ள, வடக்கு, கிழக்கு, மேற்கு மாடவீதிகளில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஓரிரு நாளில், திருவான்மியூர் மார்க்கெட், இரண்டு இடங்களில் செயல்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X