பொது செய்தி

தமிழ்நாடு

பஸ்களை இயக்கம் குறித்து ஆலோசிக்க போக்குவரத்து கழக தொழிற்சங்கம் வலியுறுத்தல்

Added : மே 13, 2020
Share
Advertisement

சென்னை, மே 14--'ஊரடங்கிற்கு பின், பஸ்களை இயக்குவது குறித்து, எங்களையும் அழைத்து ஆலோசிக்க வேண்டும்' என, அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.இது குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:தமிழகத்தில், ஒரு பஸ்சை, 1 கி.மீ.,க்கு இயக்க, 43 ரூபாய் செலவாகிறது.

ஆனால், 30 ரூபாய்க்கு குறைவாகவே வசூலாகிறது. அதாவது, 1 கி.மீ.,க்கு, 13 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், ஊரடங்குக்கு பின், 50 சதவீத பயணி யருடன் பஸ்சை இயக்கினால், 1 கி.மீ.,க்கு, 20 ரூபாயாக இழப்பு அதிகரிக்கும். தற்போது, பஸ்களை கிருமி நாசினியால் சுத்தம் செய்வது, ஊழியர்களுக்கு கையுறை, முகக் கவசம் வாங்குவது உள்ளிட்ட, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவு அதிகரிக்கும். அதேநேரம், ஒவ்வொரு பஸ்சுக்கும், ஒவ்வொரு மாதமும், 9,000 ரூபாய் முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை, மோட்டார் வாகன வரியாக செலுத்த வேண்டி உள்ளது.

அதேபோல், சுங்கக் கட்டணம், டீசல் வரி, உதிரி பாகங்களுக்கான வரி போன்றவற்றுக்கும், வசூலில் பெரும் பகுதியை செலுத்த வேண்டி உள்ளது. இதனால், போக்குவரத்து கழகங்கள், பெரும் நிதி நெருக்கடியை சந்திக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, ஊழியர்களுக்கான சலுகைகள், நிலுவையில் உள்ளன. ஒன்பது மாதமாக, ஊதிய உயர்வு பேச்சும் நடக்காமல் உள்ளது. எனவே, பஸ்களை இயக்குவதால் ஏற்படும் இழப்பை ஏற்க, அரசு முன்வர வேண்டும். மேலும், தொழிலாளர் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேச, பஸ்களை இயக்கும் முன், தொழிற்சங்கத்தினரை அழைத்து, அரசு ஆலோசிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X