பூரண மதுவிலக்கு தோல்வி கார்த்தி எம்.பி., சொல்கிறார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூரண மதுவிலக்கு தோல்வி கார்த்தி எம்.பி., சொல்கிறார்

Added : மே 13, 2020
Share

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் கார்த்தி எம்.பி., கூறியதாவது:காங்.,ஆட்சி செய்யும் இடங்களில் பூரண மது விலக்கு இல்லை. பூரண மது விலக்கு தோல்வியடைந்த கொள்கை. மது விற்பனையை முறைப்படுத்தி குறைவான நேரம் விற்க வேண்டும்.

கொரோனா பரவலுக்கு சமூக இடைவெளி தீர்வு கிடையாது. பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும்.நாட்டில் 12 சதவீதம் டாக்டர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகம் சிறப்பான நிலையில் இருப்பதற்கு நமது பண்பாடு, கல்வி அறிவு காரணம். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை.மக்கள் கையில் பணம் கொடுத்து லாக்டவுன் செய்திருந்தால் பாதிப்பு இருந்திருக்காது. மாநிலங்களுக்குள் எத்தனை நாளைக்கு போக்குவரத்தை தடை செய்ய முடியும். இதற்கு தீர்வு வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X