பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர்

Added : மே 13, 2020
Share
Advertisement

மதுரவாயல் : ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, 50 ஆயிரம் குடும்பங்களுக்கு, அமைச்சர் பெஞ்சமின், நிவாரண உதவி வழங்கினார்.

ஊரடங்கால் தவித்து வரும், வாழ்வாதாரமற்ற குடும்பங்களுக்கு, தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி வருகின்றனர்.இதன்படி, வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல், நெற்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில், கட்டட தொழிலாளர்கள் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் என, ஏராளம் பேர் வசித்து வருகின்றனர்.

அவர்கள் நலன் கருதி, நலிந்த, 50 ஆயிரம் குடும்பங்களுக்கு, தலா, 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்க, ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் முடிவு செய்தார்.இதன்படி, கடந்த இரு தினங்களாக, கட்சி நிர்வாகிகள் மூலம் தினமும், 1,000 பேருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.இதில், மதுரவாயல், பாரதியார் தெரு உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் வைத்து, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த, 300 பேருக்கு, நேற்று அரிசி வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X