தமிழ்நாடு

ரயில்வே இன்ஸ்பெக்டர் உட்பட 7 பேருக்கு தொற்று

Added : மே 13, 2020
Share
Advertisement
 ரயில்வே இன்ஸ்பெக்டர்  உட்பட 7 பேருக்கு தொற்று

சென்ட்ரல் : சென்னை, சென்ட்ரல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும், ஆறு, ஆயுதப்படை காவலர்கள் உட்பட ஏழு பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடன் பணி புரிந்த, 25 வயது முதல், 30 வயது வரையுள்ள, மூன்று பெண் மற்றும் ஆண் ஆயுதப்படை காவலர்கள், ஆறு பேர் என, ஏழு பேர், கொரோனாவால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ரயில்வே பாதுகாப்பு படையில் பணிபுரியும், 40 வயது காவலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, ராயபுரம் மண்டல அதிகாரிகள், அனைவரையும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

தீயணைப்பு வாகனம் மூலம், சென்ட்ரல் ரயில் நிலையம் முழுதும், கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ளே, ரயில்வே காவல் நிலையத்தை மூடி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X