சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனநல காப்பகத்தில் வாலிபருக்கு கொரோனா

Added : மே 13, 2020
Share
Advertisement

சூளைமேடு : மனநல காப்பகத்தில் உள்ள வாலிபருக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, அங்கேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சூளைமேடு பகுதியில் தனியார் மனநலம் காப்பகம் உள்ளது. இங்கு, 47 நோயாளிகளும், நான்கு ஊழியர்களும் உள்ளனர். இந்நிலையில், 10ம் தேதி, 24 வயது மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு, காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவருக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.தொடர்ந்து அவர், அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மற்றவர்களுக்கு ஏதேனும் கொரோனா அறிகுறி தென்பட்டால் மட்டும், பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மனநலம் காப்பகத்தில் உள்ள வாலிபருக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியாமல், சுகாதார துறையினர் திணறி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X