முடி திருத்துவோர் திடீர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முடி திருத்துவோர் திடீர் ஆர்ப்பாட்டம்

Added : மே 13, 2020
Share

திருவொற்றியூர் : ஊரடங்கால் மூடப்பட்ட, சலுான் கடையை திறக்க அனுமதி கோரி, முடி திருத்துவோர், தாசில்தார் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவொற்றியூர், மணலி, மணலிபுதுநகர், எண்ணுார் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட, முடி திருத்தும் கடைகள் உள்ளன.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மார்ச், 24ம் தேதி முதல், மூன்று கட்டங்களாக, மே, 17 வரை ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டது. இடையிடையே, தமிழக அரசு, தளர்வுகளையும் அறிவித்து வருகிறது.அந்த வகையில், டீ கடை உள்ளிட்ட, 34 வகையான சிறு கடைகள் இயங்க, சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கப்பட்ட கடைகளை தவிர்த்து, மற்ற சில சிறு கடைகளும் செயல்படுகின்றன.

ஆனால், முடி திருத்தம் செய்யும் கடைகள், அழகு நிலையங்கள் திறக்க தடை நீடிக்கிறது. இதனால், முடி திருத்தம் தொழில் செய்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.அறிவிப்பு வெளியாகும் என, காத்திருந்த நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று மதியம், திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஊரடங்கால், பெரும் சிரமம் அடைந்துள்ளோம். ஏறக்குறைய அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், முடி திருத்தும் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கவில்லை.அதிகாரிகள் கவனித்து, கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிடில், நிவாரண தொகை வழங்க வேண்டும் என, கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X