பொது செய்தி

தமிழ்நாடு

சொந்த ஊர் செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு பரிசோதனை

Added : மே 13, 2020
Share
Advertisement
அம்பத்துார் : சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி கோரிய, வட மாநில தொழிலாளர்களுக்கு, உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.சென்னை, அம்பத்துாரில் உள்ள, தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில், வேலை செய்து வந்த, 1,800 வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி கோரினர்.அவர்கள், நேற்று காலை, அம்பத்துார் தொழிற்பேட்டை பஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு,

அம்பத்துார் : சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி கோரிய, வட மாநில தொழிலாளர்களுக்கு, உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை, அம்பத்துாரில் உள்ள, தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில், வேலை செய்து வந்த, 1,800 வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி கோரினர்.அவர்கள், நேற்று காலை, அம்பத்துார் தொழிற்பேட்டை பஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் மூலம், அவர்களது ஆதார் எண் உள்ளிட்ட, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

இதையடுத்து, அம்பத்துார் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள, கொரோனா பரிசோதனை மையத்தில், அவர்களுக்கு, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.அதில், உடல் ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள், இன்று, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு, அனுப்பி வைக்கப்படுவர் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X