பொது செய்தி

தமிழ்நாடு

டன் கணக்கிலான தக்காளியை இலவசமாக வழங்கிய சில்லரை வியாபாரி

Added : மே 13, 2020
Share
Advertisement
அம்பத்துார் : திருமழிசை மார்க்கெட்டில், கடை கிடைக்காமல் அதிருப்தி அடைந்த சில்லரை வியாபாரி, 3.5 டன் தக்காளியை, வடமாநில தொழிலாளருக்கு இலவசமாக வழங்கினார்.சென்னை முகப்பேர் கிழக்கு, மூன்றாவது பிளாக்கை சேர்ந்தவர் சரவணகுமார், 41. இவர், கோயம்பேடில், பல ஆண்டுகளாக, 300 சதுர அடியில், தக்காளி கடை நடத்தி வருகிறார்.கொரோனா பரவல் எதிரொலியாக, கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதையடுத்து,
டன் கணக்கிலான தக்காளியை இலவசமாக வழங்கிய சில்லரை வியாபாரி

அம்பத்துார் : திருமழிசை மார்க்கெட்டில், கடை கிடைக்காமல் அதிருப்தி அடைந்த சில்லரை வியாபாரி, 3.5 டன் தக்காளியை, வடமாநில தொழிலாளருக்கு இலவசமாக வழங்கினார்.

சென்னை முகப்பேர் கிழக்கு, மூன்றாவது பிளாக்கை சேர்ந்தவர் சரவணகுமார், 41. இவர், கோயம்பேடில், பல ஆண்டுகளாக, 300 சதுர அடியில், தக்காளி கடை நடத்தி வருகிறார்.கொரோனா பரவல் எதிரொலியாக, கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதையடுத்து, திருமழிசையில், 200 மொத்த வியாபார கடைகளுக்கு மட்டுமே, அனுமதி வழங்கப்பட்டன.

இதனால், கோயம்பேடில் பல ஆண்டாக, காய்கறி வியாபாரம் செய்து வந்த பலருக்கு கடை கிடைக்கவில்லை. அவர்களில், ஒருவரான தக்காளி வியாபாரி சரவணகுமார், தனக்கு நியாயமான முறையில், திருமழிசையில் கடை கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இதனால், விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த, 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 3,500 கிலோ தக்காளியை, நேற்று மதியம், சாலையில் வீச வாகனத்தில் கொண்டு சென்றார்.

அப்போது, அவரிடம் பேசிய சிலர், 'தக்காளியை சாலையில் கொட்டி வீணாக்குவதை விட, ஏழை எளியவர்களுக்கு கொடுத்து உதவலாமே...' என, அறிவுறுத்தி உள்ளனர்.இதையடுத்து, அவர் மனம் மாறி, அம்பத்துார் தொழிற்பேட்டை இன்ஸ்பெக்டர் விஜயராகவனிடம், 3.5 டன் தக்காளியை ஒப்படைத்தார்.அவை, அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள, 1,800 வடமாநில தொழிலாளர் மற்றும் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால், சரவணகுமார் மன நிறைவுடன் வீட்டிற்கு சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X