தமிழ்நாடு

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 4 தாசில்தார்களுக்கு கொரோனா தொற்று

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை, தாசில்தார், கொரோனா, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Tahsildars, Chennai Collector's office, test positive

சென்னை: கலெக்டர் அலுவலகத்தில் பணி புரிந்த, மேலும், இரண்டு பெண் தாசில்தார்கள் உட்பட, மூவருக்கு, கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில், ஏப்ரல் மாதம் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த, இரண்டு தாசில்தார்கள், இரண்டு வருவாய் ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் பணியாற்றியவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு காண்காணிக்கப்பட்டனர்.


latest tamil news


தொடர்ந்து, தடுப்பு பணியில் ஈடுபடும், அலுவலர்களுக்கு, சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கலெக்டர் அலுவலகத்தில் தொற்று ஏற்பட்ட நபர்களுடன் பணியாற்றிய, இரண்டு பெண் தாசில்தார்கள் உட்பட, மூவருக்கு, நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், சக ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.தொடர்ந்து மற்ற பணியாளர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s vinayak - chennai,இந்தியா
14-மே-202007:20:48 IST Report Abuse
s vinayak நேர்மையாக பணியாற்ற வேண்டும்.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
14-மே-202001:32:06 IST Report Abuse
Matt P வாய் மூக்கு மூடி அணிந்தார்களா ? ..இல்லையா என்பதை தெரிவியுங்கள். இல்லையென்றால் எல்லோரும் அணியுங்கள். அணியவில்லையென்றால் ...மூடியுனுள்ளும் நுழைந்து வரும் என்பதால் கண்டிப்பாக அணிவோம். ..கொடூரமா ஒண்ணை பார்த்தால் எல்லோருக்கும் பயம் வருகிறது. பார்க்கவில்லையென்றால் , நம்பிக்கை இல்லாமல் தான் போகிறது. விஞ்சானத்தால் கண்டுபிடித்த கரோனாவிலும் நம்பிக்கை இல்லை. anjaanathal கண்டுபிடித்த கடவுளிலும் நம்பிக்கை இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X