பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு ஐ.ஐ.டி.,யில் சிகிச்சை

Added : மே 14, 2020
Share
Advertisement

அடையாறு : சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள, 400 படுக்கை வசதி கொண்ட தனிமை முகாமில், கொரோனா பாதித்த அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பாதித்து, வேறு நோய் அறிகுறி இல்லாத நபர்களுக்கு, தனிமை முகாமில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக, சென்னை வர்த்தக மையம் மற்றும் பல கல்லுாரிகளின், தனிமை முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த வகையில், சென்னை, ஐ.ஐ.டி., வளாகத்தில், 400 படுக்கை கொண்ட, தனிமை முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, போலீஸ் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது, 60 போலீசார், இரு மருத்துவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.மருத்துவர்கள் பரிந்துரையில், தனிமையில் இருக்க வேண்டிய அரசு ஊழியர்களை, இங்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான, அனைத்து வசதிகளையும் மாநகராட்சி செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X