சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெமிலிச்சேரி ஏரி ஆக்கிரமிப்பு

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

குரோம்பேட்டை : குரோம்பேட்டை, நெமிலிச்சேரி ஏரியில், கட்டட இடிபாடுகளை கொட்டி, ஏரியை ஆக்கிரமிக்கும் செயலில், மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, பல்லாவரம் நகராட்சி பகுதியான, குரோம்பேட்டையில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, நெமிலிச்சேரி ஏரி உள்ளது. மொத்தம், 37 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டன. தற்போது, 10 ஏக்கராக சுருங்கி விட்டது.இந்த ஏரியில், 40 ஆண்டுகளுக்கு மேலாக, பிளாஸ்டிக் கழிவுகளால் மூடப்பட்டிருந்தது.

இந் நிலையில், நம் நாளிதழில், நீர்நிலைகளை சீரமைக்க, நலச்சங்கங்கள், தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்து, வெளியிடப்பட்ட, 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என்ற அறிவிப்பை தொடர்ந்து, ஏரி பாதுகாப்பு குழு களத்தில் இறங்கியது.அக்குழு, 3,௦௦௦ லோடுக்கும் அதிகமான, பிளாஸ்டிக் கலந்த மண்ணை எடுத்து குவித்தது. தொடர்ந்து, பொதுப்பணித்துறை மூலம், டெண்டர் விடப்பட்டு, துார் வாரப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையில், இந்த ஏரி நிரம்பி, கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், கட்டட இடிபாடுகளை கொட்டி, ஏரியை, கொஞ்சம், கொஞ்சமாக ஆக்கிரமிக்கும் செயலில், மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். மீன் மார்க்கெட் அருகே, ஏற்கனவே, கட்டட இடிபாடுகளை கொட்டி, வாகனங்களை வரிசையாக நிறுத்திஉள்ளனர்.தற்போது, அதன் அருகிலேயே, தொடர்ந்து, கட்டட இடிபாடுகள் கொட்டப்படுகின்றன.கட்டட இடிபாடுகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற, மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
14-மே-202002:36:31 IST Report Abuse
Raj இதே நிலை மாடம்பாக்கம் EB ஆபிஸ் எதிரில் உள்ள குளத்துக்கும் ஏற்பட்டுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X