தமிழ்நாடு

28 நாட்கள் தடை; 14 நாட்களாக தளர்த்த மாநகராட்சி முடிவு!

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : கொரோனா பாதித்த நபர்கள் வசிக்கும் தெருக்கள், 28 நாட்கள், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு வசிக்கும் கொரோனா பாதிக்காத நபர்கள், பணிக்காக வெளியே வர முயல்வதால், 14 நாட்களாக தளர்த்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க, மக்கள் தொகை அடர்த்தியான தெருக்கள், தடை செய்யப்பட்ட பகுதியாக
 28 நாட்கள் தடை; 14 நாட்களாக தளர்த்த மாநகராட்சி முடிவு!

சென்னை : கொரோனா பாதித்த நபர்கள் வசிக்கும் தெருக்கள், 28 நாட்கள், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு வசிக்கும் கொரோனா பாதிக்காத நபர்கள், பணிக்காக வெளியே வர முயல்வதால், 14 நாட்களாக தளர்த்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க, மக்கள் தொகை அடர்த்தியான தெருக்கள், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன.தற்போது, 700 தெருக்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன. தெருவில் உள்ள நபருக்கு, வைரஸ் பாதித்த நாளில் இருந்து, 28 நாட்கள் வரை தடை உள்ளது.இதனால், அந்த தெருவில் வசிக்கும் நபர்கள், வெளியே செல்லக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு தளர்வு, கடைகள், தொழில் நிறுவனங்கள் திறப்பு, கட்டுமானத்திற்கு தடையில்லை போன்ற காரணத்தால், மக்கள் பணிக்கு செல்ல துவங்கிவிட்டனர்.ஆனால், தடை செய்யப்பட்ட தெருக்களில், கொரோனா பாதிக்காத நபர்கள், வேலைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், 28 நாட்கள் என்பதை, 14 நாட்களாக குறைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகரிகள் கூறியதாவது:ஊரடங்கு தளர்வால், கொரோனா பாதிக்காத நபர்கள், பணிக்கு செல்ல வெளியே வர முயற்சி செய்கின்றனர். சில இடங்களில், போலீசாருடன் தகராறு ஏற்படுகிறது. இதனால், 28 நாட்களை, 14 நாட்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பாதித்த நபர், அவருடன் வசிப்போர், 28 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-மே-202016:49:11 IST Report Abuse
Lion Drsekar "ஆனால், கொரோனா பாதித்த நபர், அவருடன் வசிப்போர், 28 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்."they can only send these messages through press media can't even near or inform directly. Wen the Govt itself is afraid like this what about the citizens? vandhe madaram
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X