விடாதீர்கள்... ரேஷனில் இருமடங்கு அரிசியை பெறாமல் கடைகளில் ஒதுக்கீடு விபரம் இல்லை | Dinamalar

தமிழ்நாடு

விடாதீர்கள்... ரேஷனில் இருமடங்கு அரிசியை பெறாமல் கடைகளில் ஒதுக்கீடு விபரம் இல்லை

Added : மே 14, 2020
Share

சிவகங்கை:ஊரடங்கால் மத்திய, மாநில அரசுகள் கார்டுகளுக்கு ஜூன் வரை இலவச அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை வழங்குவதை, விடுபடாமல் ரேஷன் கடைகளில் கேட்டு பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 3.93 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு 829 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள்
வினியோகம் செய்கின்றனர். ஊரடங்கால் உணவிற்கு தட்டுப்பாடு இல்லாமலிருக்க ஜூன் வரை இலவச அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை கிடைக்கும்.மத்திய அரசும் தன்
பங்களிப்பாக 'பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில்', நபருக்கு 5 கிலோ இலவச அரிசி தருகிறது. மாவட்ட அளவில் 3.93 லட்சம் கார்டுகள் மூலம் 12 லட்சத்து 16 ஆயிரத்து 250 பேர் பயன் பெறுகின்றனர்.

ஆனால் பெரும்பாலான ரேஷன் கடைகளில் அரிசி வரவில்லை. பருப்பு, சர்க்கரை, பாமாயில் இருப்பு இல்லை எனக்கூறி முழுமையாக கார்டுதாரர்களுக்கு சப்ளை செய்யாமல் திருப்பி அனுப்புகின்றனர்.மத்திய அரசு தரும் 5 கிலோ அரிசி குறித்து எந்த அறிவிப்பும் கடைகளில் இல்லை. மத்திய அரசு தரும் அரிசி குறித்து தெரியாமலேயே மக்கள் சென்று விடுகின்றனர். கார்டுதாரர்கள் பெயரில் இலவச அரிசியை எடுத்து, கள்ளச்சந்தையில் விற்பதாக புகார்
எழுந்துள்ளது.

இதை தவிர்க்க மத்திய, மாநில அரசு ஒதுக்கீடு குறித்த விபரத்தை ரேஷன் கடைகளில்
ஒட்டுமாறு குடிமை பொருள் வழங்கல் துறை கூறியுள்ளது.எனவே, சிவகங்கை மக்கள் மத்திய, மாநில அரசு ஜூன் வரை வழங்கும் இருமடங்கு இலவச அரிசியை விடுபட்டு விடாமல் வாங்கி பயன்பெறலாம். மத்திய அரசு வழங்குவதால், மாநில அரசும் வழக்கத்தை விட குறைவான
அளவில் அரிசி ஒதுக்கீடு செய்துள்ளது.

அந்தியோதயா அன்ன யோஜானா (ஏ.ஏ.ஒய்) திட்ட கார்டுக்கு 35 கிலோவுடன், நபருக்கு மத்திய அரசின் கூடுதல் 5 கிலோ அரிசியும் உண்டு. ஏப்ரல் மாதம் பெறாதவர்களுக்கான அரிசியை மே மற்றும் ஜூன் மாதத்தில் பிரித்து வழங்க வேண்டும்.

கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:

மத்திய, மாநில அரசு வழங்கும் இலவச அரிசியை முறையாக கார்டுதாரர்கள், டோக்கன் பெற்று சமூக இடைவெளி, முககவசம் அணிந்து கடையில் பெறலாம். இது குறித்த விபரம் ரேஷன் கடை நோட்டீஸ் போர்டில் ஒட்டப்படும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X