டில்லியில் தவித்த தமிழர்கள்:பா.ஜ., மூலம் நிவாரணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டில்லியில் தவித்த தமிழர்கள்:பா.ஜ., மூலம் நிவாரணம்

Added : மே 14, 2020
Share
திருப்பூர்:டில்லியில் உணவுக்கு வழியின்றி தவித்த தமிழக தொழிலாளர்களுக்கு பா.ஜ., சார்பில் உதவி வழங்கப்பட்டது.தாராபுரத்தை அடுத்த தேர்ப்பட்டி, கொல்லப்பட்டி பகுதிகளை சேர்ந்த, 50 குடும்பங்கள் டில்லியில் கூலி வேலை செய்து வருகின்றனர்.டில்லி, மங்கள்புரி வசித்து வரும் தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.ஊரடங்கால், வேலையின்றி வருமானமிழந்து

திருப்பூர்:டில்லியில் உணவுக்கு வழியின்றி தவித்த தமிழக தொழிலாளர்களுக்கு பா.ஜ., சார்பில் உதவி வழங்கப்பட்டது.தாராபுரத்தை அடுத்த தேர்ப்பட்டி, கொல்லப்பட்டி பகுதிகளை சேர்ந்த, 50 குடும்பங்கள் டில்லியில் கூலி வேலை செய்து வருகின்றனர்.டில்லி, மங்கள்புரி வசித்து வரும் தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர்.ஊரடங்கால், வேலையின்றி வருமானமிழந்து உணவுக்கு கூட வழியின்றி அவதிப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து திருப்பூர் மற்றும் தாராபுரம் பகுதியை சேர்ந்த பா.ஜ., நிர்வாகிகள், அக்கட்சியின் ஊடக பிரிவு மாநில செயலாளர் நாராயணன் திருப்பதியை தொடர்பு கொண்டு பேசினர்.உடனே, அவர் டில்லி மாநகராட்சி அலுவலர்கள் தொடர்பு கொண்டு நிலையை கூறினார். அதன்பின், தமிழக தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை அதிகாரிகள் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X