அரசு பஸ்கள் பராமரிப்பு பணி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்கள் பராமரிப்பு பணி துவக்கம்

Added : மே 14, 2020
Share

சிவகங்கை:ஊரடங்கிற்கு பின் பஸ்களை இயக்க சிவகங்கை, ராமநாதபுரம்மாவட்டத்தில் 800 பஸ்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க மே 17 வரை ஊரடங்கு அமலில்உள்ளது. அதற்கு பின் அரசு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பஸ்சில் 25 பயணிகள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து செல்லவும், 5 பேர் நின்று செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. அரசு பஸ்களை அதிகாரிகள் தயார்நிலையில் வைத்து வருகின்றனர்.

காரைக்குடி அரசு போக்குவரத்து கழகத்தின்கீழ் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 கிளைகளின் கீழ் இயங்கும் 880 பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.சிவகங்கை கிளையில் காரைக்குடி துணை மேலாளர் (டெக்னிக்கல்) சுந்தரபாண்டியன், சிவகங்கை துணை மேலாளர் நலங்கிள்ளி, கிளை மேலாளர் சொக்கலிங்கம் முன்னிலையில் டெக்னிக்கல் ஊழியர்கள் 66 பஸ்களில் பராமரிப்பு பணி மேற்கொண்டனர். எனினும் பயணிகள்இருக்கை மாற்றி அமைக்கவில்லை. அரசின் அறிவிப்பிற்கு பின்னரே இருக்கைகள் மாற்றி அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X