அதிக பாரம் ஏற்றும் லாரிகளால் அபாயம்| Dinamalar

அதிக பாரம் ஏற்றும் லாரிகளால் அபாயம்

Added : மே 14, 2020
Share

திருப்புவனம்:திருப்புவனத்தில் அளவுக்கதிகமாக பாரம் ஏற்றும் லாரிகளால் தினசரி விபத்து நேரிடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருப்புவனத்தைச் சுற்றிலும் ஏராளமான செங்கல் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து செங்கற்கள், சித்துக்கற்கள் உள்ளிட்டவை மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. லாரிகள், சிறியவேன்கள்,டிராக்டர்கள் ஆகியவற்றில் செங்கற்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் ஏற்றி செல்வதால் வளைவுகள், மேடு பள்ளங்களில் செல்லும் போது பாரம் தாங்காமல் லாரிகள் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகின்றன.

இது தவிர தென்னந்தோப்புகளில் இருந்து வெட்டப்பட்ட தேங்காய்கள், கருவேல மரங்கள் உள்ளிட்டவற்றையும் அதிகம் ஏற்றி செல்கின்றனர்.கடந்த இரு நாட்களுக்கு முன் நான்கு வழிச்சாலையில் நரிக்குடி ரோடு விலக்கில் பேரிகார்டில் திரும்ப முயன்ற செங்கல் ஏற்றிய லாரியில் இருந்து செங்கல் லோடு சரிந்து விழுந்தது.இதுபோன்று தொடர் விபத்துகளால் சாலை பயணம் கேள்விக்குறியாகி வருகிறது.

எனவே அதிகளவு பாரம் ஏற்றும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X