பொது செய்தி

தமிழ்நாடு

முககவசம் ஏற்றுமதி: 'மாஜி' எம்.பி., கடிதம்

Added : மே 14, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் உற்பத்தியாகும் முககவசங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க வேண்டுமென, முன்னாள் எம்.பி., சத்தியபாமா, கோரிக்கை வைத்துள்ளார்.திருப்பூர் முன்னாள் எம்.பி., சத்தியபாமா, பிரதமருக்கு அனுப்பிய கடிதம்:திருப்பூரில், மருத்துவ பயன்பாட்டுக்கான, ஒருமுறை பயன்படுத்தும் முககவசம், பொது பயன்பாட்டுக்கான முக கவசம் என, இரு வகை முக கவசம் தயாரிக்கப்படுகிறது.இந்தியாவின்

திருப்பூர்:திருப்பூரில் உற்பத்தியாகும் முககவசங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க வேண்டுமென, முன்னாள் எம்.பி., சத்தியபாமா, கோரிக்கை வைத்துள்ளார்.திருப்பூர் முன்னாள் எம்.பி., சத்தியபாமா, பிரதமருக்கு அனுப்பிய கடிதம்:திருப்பூரில், மருத்துவ பயன்பாட்டுக்கான, ஒருமுறை பயன்படுத்தும் முககவசம், பொது பயன்பாட்டுக்கான முக கவசம் என, இரு வகை முக கவசம் தயாரிக்கப்படுகிறது.இந்தியாவின் ஒட்டுமொத்த முக கவச தேவைகளை, திருப்பூர் நிறுவனங்களை தயாரித்து வழங்க முடியும். பின்னலாடை துணியில் தயாராகும்முக கவசங்களை, சலவை செய்தும் பயன்படுத்தஇயலும்.அதிக எண்ணிக்கையிலான முககவசங்களை உற்பத்தி செய்யும் ஆற்றல், திருப்பூர் தொழில் மையத்துக்கு உண்டு.திருப்பூரில் இருந்து, பின்னலாடை துணியால் உருவாகும் முக கவசங்களை, ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X