திருப்பூர்:திருப்பூரில் உற்பத்தியாகும் முககவசங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க வேண்டுமென, முன்னாள் எம்.பி., சத்தியபாமா, கோரிக்கை வைத்துள்ளார்.திருப்பூர் முன்னாள் எம்.பி., சத்தியபாமா, பிரதமருக்கு அனுப்பிய கடிதம்:திருப்பூரில், மருத்துவ பயன்பாட்டுக்கான, ஒருமுறை பயன்படுத்தும் முககவசம், பொது பயன்பாட்டுக்கான முக கவசம் என, இரு வகை முக கவசம் தயாரிக்கப்படுகிறது.இந்தியாவின் ஒட்டுமொத்த முக கவச தேவைகளை, திருப்பூர் நிறுவனங்களை தயாரித்து வழங்க முடியும். பின்னலாடை துணியில் தயாராகும்முக கவசங்களை, சலவை செய்தும் பயன்படுத்தஇயலும்.அதிக எண்ணிக்கையிலான முககவசங்களை உற்பத்தி செய்யும் ஆற்றல், திருப்பூர் தொழில் மையத்துக்கு உண்டு.திருப்பூரில் இருந்து, பின்னலாடை துணியால் உருவாகும் முக கவசங்களை, ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE