திருப்பூர்:உயரழுத்த மின் இணைப்பு வாடிக்கையாளரை, 26ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாதென, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழத்தில், மார்ச், 24ம் தேதி முதல், 42 நாட்கள் நிறுத்தப்பட்டிருந்த தொழில்கள், 6ம் தேதி முதல், இயங்க துவங்கியுள்ளன. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இயங்காததால், மின்கட்டணம் செலுத்த வற்புறுத்தக்கூடாதென, அரசு அறிவித்திருந்தது.
இதில், 90 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டுமென, மின்வாரியம் கேட்பு அறிக்கை அனுப்பி வருவதால், தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு நுாற்பாலை உரிமையாளர்கள் சங்கம் (டாஸ்மா) சார்பில், மதுரை ஐகோர்ட் கிளையில் 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து 'டாஸ்மா' சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:ஊரடங்கில் நுாற்பாலைகள் இயங்காவிட்டாலும், 90 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டுமென, மின்வாரியம் கேட்பு அறிக்கை வழங்கியுள்ளது.இதை எதிர்த்து, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது. அவசர மனுவாக ஏற்று விசாரித்த கோர்ட், தமிழகத்தில் உள்ள உயரழுத்த மின் இணைப்பு வாடிக்கையாளரை, ஏப்., மாதத்திற்கான மின்கட்டணம் செலுத்தக்கோரி, வரும், 26ம் தேதி வரை நிர்பந்தம் செய்யக்கூடாது என, நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE