எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சிக்கு வழிகாட்டும் அறிவிப்புகள்....

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020
Share
Advertisement
வளர்ச்சிக்கு வழிகாட்டும் அறிவிப்புகள்....

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா மீள, ரூ. 20 லட்சம் கோடிக்கு பல சலுகைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


இதன் முக்கிய அம்சங்கள்



*சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க, ரூ. 3 லட்சம் கோடி நிதி.

*ஆண்டுக்கு ரூ. 100 கோடி வரை வணிகம் செய்யும் நிறுவனங்கள், அக். 31 வரை கடன் பெறலாம். 45 லட்சம் நிறுவனங்கள் பலனடையும்.

*சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி வழங்க நிதியம் மற்றும் துணை நிதியங்கள் உருவாக்கப்படும்.

*இந்திய நிறுவனங்கள் பயன் பெறும் வகையில், ரூ. 200 கோடி வரையிலான டெண்டர்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்க தடை.

*சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் வழங்க ரூ. 45,000 கோடிண மின் உற்பத்தி, பகிர்மான நிறுவனங்களுக்கு ரூ. 90,000 கோடி கடனுதவி

*வருங்கால வைப்பு நிதிக்காக மத்திய அரசு ரூ. 2,500 கோடி ஒதுக்கீடு. அடுத்த 3 மாதத்துக்கு தனியார் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பி,எப்., தொகை 12ல் இருந்து 10 சதவீதமாக குறைப்பு. 100 ஊழியர்களுக்கு கீழ் உள்ள நிறுவனங்களில் 90% பேர் மாதம் ரூ. 15,000க்கு குறைவாக சம்பளம் வாங்கினால், பி.எப்., தொகையை ஜூன் -ஆகஸ்ட் வரை அரசே செலுத்தும்.

*அடுத்த 45 நாட்களில் சிறு, குறு நிறுவன தயாரிப்புகளை "இ-மார்கெட்' மூலம் விற்பனை செய்ய உதவி

*வங்கி சாராத மற்ற நிதி நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி உதவி

*சிறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ. 10 கோடியில் இருந்து ரூ. 50 கோடியாக அதிகரிப்பு

*வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ. 50,000 கோடி கடன்

*தொழிலாளர்களிடம் இருந்து டி.டி.எஸ்., வரி பிடித்தம், அடுத்த ஆண்டு மார்ச் வரை 25 சதவீதம் குறைப்பு. இதனால் ரூ. 50,000 கோடி அளவுக்கு வரி செலுத்துவோர் பயன் அடைவர்.

* நிதி நெருக்கடியில் சிக்கிய சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 20,000 கோடி.

*வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அக். 31 வரை கால அவகாசம்.


பொருளாதார நிபுணர்கள் வரவேற்பு



மதுரை: கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுகட்ட ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு நிதி திட்டம் (நாட்டின் மொத்த உற்பத்தியில் 10 சதவீதம்) செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இதைதொடர்ந்து நேற்று மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் முதற்கட்டமாக 15 திட்டங்களை அறிவித்தார். இதுகுறித்து வர்த்தக சங்க நிர்வாகிகள், பொருளாதார நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்கள்...


ரூ.3 லட்சம் கோடி நிதிக்கு நன்றி



நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்ட நிதியில் ரூ. 3 லட்சம் கோடி சிறு, குறுந்தொழில்களுக்காக ஒதுக்கியதற்கு நன்றி. இதில், பிணையம் இல்லாமல் கடன் வழங்குவதாக அறிவித்தது முக்கியமான அம்சம். மிகவும் சிரமத்தில் இருக்கும் மற்றும் தொடர்ந்து நடத்த முடியாமல் இருக்கும் நிறுவனங்களின் புனர்வாழ்வுக்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கியதன் மூலம் 2 லட்சம் சிறு, குறுந்தொழில்கள் பயன்பெறும்.
சந்தை மதிப்பு அதிகம் இருக்கும் நிறுவனங்களுக்கு 'பண்ட் ஆப் பண்ட்' திட்டத்தில் அதாவது ஏற்கனவே கடன் கொடுத்த நிலையில் கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்குவதாக அறிவித்ததால் நிறுவனங்கள் உற்சாகத்துடன் முன்னேறும். அரசிடம் இருந்து திரும்பப்பெற வேண்டிய வருமான வரியில் ரூ.18 ஆயிரம் கோடி தருவதால் மக்களிடம் பணப்புழக்கம்
அதிகரிக்கும்.கே.பி.முருகன், முன்னாள் தலைவர், மடீட்சியா, மதுரை


'மேக் இன் இந்தியா' அறிவிப்புகள் அருமை



பிரதமர் கூறியது போல் அறிவிப்புகள் பல 'மேக் இன் இந்தியா' திட்டத்தை நோக்கி இருந்தது அருமை. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அரசு நிறுவனங்கள் வெளியிடும் ரூ.200 கோடி குளோ பல் டெண்டர்களில் பங்கு பெறலாம், வெளிநாட்டுக் நிறுவனங்களின் போட்டி
இருக்காது என்பது நல்ல விஷயம். ரூ.3 லட்சம் கோடி வரை வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் தொழில் செய்வோர், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அவர்கள் வங்கிகளில் பிப்., இறுதியில் வாங்கிய கடனில் 20 சதவீதம் அதிகமாக கடன் வாங்கலாம்.
இது ரூ.25 கோடி வரை கடன் வாங்கிய, ரூ.100 கோடி 'டேர்ன் ஓவர்' உள்ள நிறுவனங்களுக்கு பொருந்தும். கொடுக்க போகும் கடனுக்கு அரசு 'கியாரண்டி' கொடுப்பது சிறப்பு. இதில் 45 லட்சம் கம்பெனிகள் பயன்பெறும். கடனை 4 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் நிலையில் முதல் 12 மாதம் தவணை செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு பலன் தரும்.
சேதுராமன் சாத்தப்பன், பொருளாதார நிபுணர், மும்பை

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X