பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கல்வித்துறை சார்பில் சி.ஏ., படிப்பு நேரலை நிகழ்ச்சி

Added : மே 14, 2020
Share
Advertisement

திருப்பூர்:பள்ளி கல்வித்துறையுடன், ஐ.சி.ஏ.ஐ., எனப்படும் இந்தியப் -- பட்டயக் கணக்காளர் நிறுவனம் இணைந்து, சி.ஏ., (பட்டயக் கணக்காளர்) படிப்பு குறித்த வழிமுறைகள் நிகழ்ச்சியை, நேரலையில் நடத்தின.ஐ.சி.ஏ.ஐ., தென்னிந்திய துணைத்தலைவர் ஜலபதி கூறியதாவது:பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சி.ஏ., படிப்பில் சேர்வது குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிமுறைகள் குறித்து, ஆண்டுதோறும் பள்ளிவாரியாகவும், பள்ளிகளை இணைத்தும், பயிலரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலால், இதை இந்தாண்டு நடத்த முடியாமல் போனது.நாட்டிலேயே முதன்முறையாக, 'யூடியூப்' நேரலை மூலம், இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதை, 17 ஆயிரம் மாணவர்கள் பார்த்தனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். இதை முன்னுதாரணமாகக் கொண்டு, பிற மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த, ஐ.சி.ஏ.ஐ., திட்டமிட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X