பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் சிட்டி' பணி 'ஜரூர்'

Added : மே 14, 2020
Share
Advertisement
 'ஸ்மார்ட் சிட்டி' பணி 'ஜரூர்'

திருப்பூர்:தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதால், 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் தீவிரமாகி உள்ளது.திருப்பூர் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முதல் கட்டமாக தேர்வு செய்து, நடந்து வருகிறது. காமராஜ் ரோட்டில் உள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகம் இடித்து விட்டு, நவீன வடிவமைப்பில் கட்டும் திட்டம் முக்கியமான திட்டமாக உள்ளது.கொரோனா காரணமாக இப்பணி துவக்க நிலையிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படுத்தி, கட்டுமானப் பணிகள் துவங்க அரசு அனுமதி அளித்தது. இதனால், மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தி, கட்டுமான பணிகளை துவங்க அறிவுறுத்தினர்.அதனடிப்படையில், பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டடம் இடிக்கும் பணி நேற்று துவங்கியது. முன்னதாக இப்பணி துவங்கும் விதமாக வளாகத்தில் பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து வணிக வளாக கடைகளில் பொருத்தியிருந்த இரும்பு ஷட்டர்கள் கழட்டி எடுக்கும் பணி நடந்தது. அதன்பின், கடைகள் இடிக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X