பொது செய்தி

தமிழ்நாடு

நுாலகம் திறக்கப்படுமா? வாசகர்கள் எதிர்பார்ப்பு

Added : மே 14, 2020
Share
Advertisement

திருப்பூர்:மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நுாலகங்கள் செயல்பாட்டுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு வாசகர் மத்தியில் எழுந்துள்ளதுஅரசு அலுவலகங்கள், 33 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 137 நுாலகங்கள் உள்ளன. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.அதனால், நுாலகங்களுக்கும் ஊரடங்கு தளர்வில் அனுமதி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு வாசகர் மத்தியில் எழுந்துள்ளது.இதுகுறித்து, வாசகர்கள் கூறுகையில்,'நுாலகத்தில், அவ்வப்போது வெவ்வேறு விதமான புத்தகங்களை எடுத்து படிப்போம். ஊரடங்கால் எடுத்த புத்தகங்களை நுாலகத்தில் மாற்ற முடியவில்லை. குறைந்தபட்சமாக மாவட்ட அளவில் செயல்படும் பெரிய நுாலகங்களுக்கு மட்டுமாவது அனுமதி வழங்க வேண்டும்,' என்றனர்.நுாலகர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது, 'நுாலகம் திறப்பதற்கான எந்த தகவலும் இல்லை. ஒருவேளை, 18ம் தேதி திறப்பதற்கு உத்தரவு வந்தால், திறப்போம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X