சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடோனில் பதுக்கி மது விற்பனை: தி.மு.க., நிர்வாகி உட்பட 6 பேர் கைது

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 குடோனில் பதுக்கி மது விற்பனை: தி.மு.க., நிர்வாகி உட்பட 6 பேர் கைது

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் மது கடத்தி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், காங்கயம் மதுவிலக்கு போலீசார், திருப்பூர் ரோடு, ஹாஸ்டல் பஸ் ஸ்டாப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியே வந்த 'சரக்கு' ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர்.ஆட்டோவின் பின்பகுதியில், பெட்டி பெட்டியாக மது வகைகள் இருந்தது, தெரிந்தது. கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களையும் பிடித்து விசாரித்தனர். அதில், திருப்பூர் அருகே உள்ள மதுக்கடையில் இருந்து மது கடத்தி வந்து, காங்கயத்தில் பதுக்கி, நான்கு மடங்கு விலைக்கு விற்பது தெரிந்தது.இந்த விவகாரத்தில், திருப்பூர் பாண்டியன் நகர் மதுக்கடையின் (எண்: 2310) மேற்பார்வையாளர் திருமூர்த்தி, 40, காங்கயம், அர்த்தநாரிபாளையம் மதுக்கடையின் (எண்: 3888) விற்பனையாளர் ஜெகதீஷ், 42, காங்கயம் தி.மு.க., நகர பொருளாளர் மகேஷ் ஜெயக்குமார், 46, சரவணக்குமார், 31, நவீன், 30 மற்றும் பால்ராஜ், 37 ஆகியோருக்கு தொடர்பு இருந்தது, தெரியவந்தது.
காங்கயம் போலீசார், ஆறு பேரையும் கைது செய்தனர். 1,152 மதுபாட்டில், கார் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறியதாவது:கோர்ட் உத்தரவு காரணமாக மீண்டும் மூடப்பட்டது. அன்றைய தினம், (8ம் தேதி) இரவு, திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லுார் (கடை எண்: 1926) மற்றும் காங்கயம் ஒட்டபாளையம் (கடை எண்: 3883) என, இரு கடைகளில் உள்ள பணியாளர்கள் மூலமாக மதுபாட்டில்கள் கடத்தி உள்ளனர்.அதன்பின், காங்கயம் காந்தி நகரிலுள்ள தி.மு.க., நிர்வாகி மகேஷ் ஜெயக்குமாரின் குடோனில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அங்கே அப்படி;இங்கே இப்படி!கடந்த, 7ம் தேதி மதுக்கடை திறக்கப்பட்ட போது, தமிழகம் முழுவதும் தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், அதே நேரம், அக்கட்சியின் காங்கயம் நகர பொருளாளர் மகேஷ் ஜெயக்குமார், திருப்பூரிருந்து மது கடத்தி, கொள்ளை லாபம் வைத்து விற்பனை செய்துள்ளார். அங்கே அப்படி; இங்கே இப்படி!கடந்த, 7ம் தேதி மதுக்கடை திறக்கப்பட்ட போது, தமிழகம் முழுவதும் தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், அதே நேரம், அக்கட்சியின் காங்கயம் நகர பொருளாளர் மகேஷ் ஜெயக்குமார், திருப்பூரிருந்து மது கடத்தி, கொள்ளை லாபம் வைத்து விற்பனை செய்துள்ளார். இதுதவிர, மது கடத்தி விற்பனை செய்யும் கும்பலுக்கு அவர் தலைவராக செயல்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-மே-202013:42:56 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan சட்டவிரோத செயல் மூலம் பிழைப்பு நடத்தும் திமுகவினர். இவர்கள் கொள்ளை லாபம் பார்க்கத்தான் தளபதி டாஸ்மார்க்கை மூடச் சொல்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X