சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாங்காத ரேஷன் அரிசிக்கு குறுந்தகவல் போராட்டம் நடத்திய மக்கள்

Added : மே 14, 2020
Share
Advertisement

திருப்புத்துார்:திருப்புத்துார் புதுப்பட்டி ரேஷன் கடையில் வாங்காத அரிசிக்கு குறுந்தகவல்
வந்ததை அடுத்துபொதுமக்கள் ரேஷன்கடையை முற்றுகையிட்டனர். பிரதமரின் கொரோனா நிவாரண அரிசியும் வழங்கப்படுவதில்லை என பா.ஜ.,வினர் புகார் செய்துஉள்ளனர்.

புதுப்பட்டி ரேஷன் கடையில் வழக்கமாக மக்களுக்கு கிடைக்கும் அரிசியே வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசு வழங்கும் அரிசித் தொகுப்பும் வாங்கியதாக பலருக்கு அலைபேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது.

வட்ட வழங்கல் அலுவலரிடம்பா.ஜ.,நிர்வாகி போஸ் முத்துப்பாண்டி,பிரதமர் கொரோனா
நிவாரணமாக வழங்கும் தலா 5 கிலோ அரிசியை மக்களுக்கு வழங்காமல் கடைக்காரர்கள் ஏமாற்றுவதாக புகார் தெரிவித்தார்.வழங்கல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது பிரதமர் தொகுப்பு அரிசி போதிய அளவு கடைகளுக்கு வழங்கப்படவில்லை என்றும், அனைவருக்கும் மத்திய அரசு வழங்கும் 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நேற்று காலை பிரதமரின்தொகுப்பு அரிசி வழங்கப்படாததால் பொதுமக்கள் ரேஷன்கடையை முற்றுகையிட்டனர். வட்ட வழங்கல் துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேற்று கடைக்கு வந்தவர்களுக்கும், முன்பு விடுபட்டவர்களுக்கும் மத்திய அரசின் தொகுப்பு அரிசி வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X