பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கை அட்டை அணிந்து பணி செவிலியர் கோரிக்கை ஏற்கப்படுமா?

Added : மே 14, 2020
Share
Advertisement

அவிநாசி:செவிலியர் தினத்தில், எம்.ஆர்.பி., ஒப்பந்த செவிலியர்கள், கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.உலக செவிலியர் தினமான நேற்று முன்தினம், அவிநாசி உள்ளிட்ட மாவட்டம் முழுக்க உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்கள், கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பெஜாக்சின் கூறியதாவது;கடந்த, 2015ல், மாநில அரசு மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலம், 10 ஆயிரம் செவிலியர்கள் போட்டி தேர்வு மூலம், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகால பணி முடிந்ததும், காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்படுவர் என, அரசு உறுதியளித்திருந்தது.ஆனால், ஐந்து ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதுதொடர்பான பொதுநல வழக்கில், சம வேலை செய்யும் செவிலியர்களுக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், 14,000 ரூபாய் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பு பணியில், முழுமையாக ஈடுபட்டுள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X