துப்புரவு ஊழியர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்புரவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

Added : மே 14, 2020
Share

அவிநாசி:திருமுருகன்பூண்டி பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள், கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருமுருகன்பூண்டி பேரூராட்சியில், 75க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா பணியில், இரவு பகலாக ஈடுபடும் இவர்களுக்கு, அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும்.அவர்களுக்கான பாதுகாப்பு கவசம் வழங்க வேண்டும்; கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரூராட்சி அலுவலகம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ரங்கராஜ், பனியன் சங்க முன்னாள் மாவட்ட பொருளாளர் நடராஜ், நிர்வாகி சுப்ரமணி பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X