கோதுமை வினியோகத்தில் தீராத குளறுபடி: பொதுவினியோக திட்டத்தில் சீராய்வு அவசியம்

Added : மே 14, 2020
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், கோதுமை ஒதுக்கீட்டை அதிகரித்து, வினியோகத்தில் உள்ள குளறுபடியை தீர்க்க வேண்டுமென, ஏழை, எளிய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, ஒன்பது தாலுகாக்களில், ஏழு லட்சத்து, 58 ஆயிரத்து, 982 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில், 7.25 லட்சம் கார்டுகள், அரிசி பெறும் கார்டுகளாக உள்ளன. மாவட்ட மக்களுக்கு, மாதம் தோறும், 523.60

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், கோதுமை ஒதுக்கீட்டை அதிகரித்து, வினியோகத்தில் உள்ள குளறுபடியை தீர்க்க வேண்டுமென, ஏழை, எளிய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, ஒன்பது தாலுகாக்களில், ஏழு லட்சத்து, 58 ஆயிரத்து, 982 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில், 7.25 லட்சம் கார்டுகள், அரிசி பெறும் கார்டுகளாக உள்ளன. மாவட்ட மக்களுக்கு, மாதம் தோறும், 523.60 டன் அளவுக்கு இலவச ரேஷன் அரிசி ஒதுக்கப்படுகிறது.கோதுமை, 33.84 டன் அளவுக்கு மட்டும் ஒதுக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, கோதுமையும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதாவது, கார்டுதாரர்களுக்கு உரிய அரிசி ஒதுக்கீட்டில், கோதுமை உள் ஒதுக்கீடு செய்து வழங்கப்படுகிறது.குறிப்பாக, வடமாநில தொழிலாளரிடம் அதிக வரவேற்பு இருப்பதால், ரேஷன் அரிசியுடன், கோதுமையும் விற்கப்படுகிறது.கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு, பல மாதங்களாக கோதுமை ஒதுக்கீடு இல்லை. குறைவான அளவு மட்டுமே கோதுமை ஒதுக்கப்படுவதால், கடைக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கோதுமை வழங்கப்படுகிறது.பொதுமக்கள் கூறுகையில், 'ஒவ்வொரு கடைக்கும், 30 சதவீதம் மட்டுமே கோதுமை ஒதுக்கப்படுகிறது. முதலில் வருபவருக்கு வழங்கி, வேலையை முடித்து கொள்கின்றனர்.மறுநாள் வருபவர்களுக்கு கிடைப்பதே இல்லை. மாவட்ட நிர்வாகம், பொது வினியோக திட்டத்தில், பொருட்கள் வினியோகத்தையும் சீராய்வு செய்ய வேண்டும். ஒதுக்கீடு குறைவாக இருந்தாலும், இரு குழுக்களாக பிரிந்து, ஒரு மாத இடைவெளியில், கோதுமை வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X