சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வட மாநிலத்தினர் போராட்டம்

Added : மே 14, 2020
Share
Advertisement
 வட மாநிலத்தினர் போராட்டம்

திருப்பூர்:திருப்பூரில், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி, வெளிமாநிலத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத்தினர், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க பல்வேறு போராட்டம் செய்தனர்.மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சிறப்பு ரயில், பஸ்கள் மூலமாக அவர்களை அனுப்பி வருகின்றனர்.இச்சூழலில், ஊருக்கு செல்ல விண்ணப்பித்து, நான்கு நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், தங்களுக்கு எவ்வித தகவலும் வரவில்லை.உடனே, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியில் தங்கியுள்ள வெளிமாநிலத்தினர், நுாற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால், வடக்கு போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம், ஊருக்கு செல்ல ஏற்பாடு நடந்து வருவதாக அறிவுரை கூறி, அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X