தமிழ்நாடு

அவசியம் கண்காணிப்பு ஓட்டுனர் உரிமமின்றி வாகனங்களை இயக்கும் சிறார்கள் அதிகரிக்கும் விதிமீறல்களை தடுக்க தேவை நடவடிக்கை

Added : மே 14, 2020
Share
Advertisement

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் ஓட்டுனர் உரிமமின்றி வாகனங்களை ஓட்டும் சிறார்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது போன்ற விதிமீறல்களை தடுக்க கண்காணிப்புடன் நடவடிக்கையும் அவசியமாகிறது.

கொரோனா ஊரடங்கு தளர்வால் வாகன போக்குவரத்து சகஜமானதால் விதிமீறல்கள் அதிகளவில் அரங்கேறி வருகிறது. இதற்கு முக்கிய காரணமே உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் சிறார்களே. லோடு ஆட்டோ உள்ளிட்ட மினிவேன்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களும், முறையாக உரிமம் பெறாதவர்களே பணி அமர்த்தப்படுகின்றனர். இவர்கள் அதிவேகமாக சீறி பாய்வதாலும், அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவதாலும் விபத்து ஏற்படுகிறது.

தொழில் நிறுவனங்களின் சரக்குகள், குடிநீர் ஏற்றி செல்லும் மினிவேன்களை ஓட்டுபவர்களில் அதிகமானோர் சிறார்களாக தான் இருக்கின்றனர். உரிமம் பெறாமலும், சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க போலீசாரும், வட்டார போக்குவரத்து துறையும் கண்காணிப்பை கடுமையாக்க வேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்க வேண்டும். தற்போது தொடரும் ஊரடங்கிலே இப்பணியை செய்தால் மட்டுமே விபத்துக்களை குறைக்க முடியும்.


வேண்டும் கடுமை

ஊரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துக்கள் அப்பாவி மக்களையும் பாதிக்கிறது. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர், சிறார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரிமம் இன்றி வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை வேண்டும்.

சிதம்பரக்கனி, சமூக ஆர்வலர், விருதுநகர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X