தமிழ்நாடு

'தாழ் திறவாய்...!'திருப்பூருக்குள் நுழைய முடியாமல், எல்லையில் தொழிலாளர்கள் பரிதவிப்பு

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020
Share
Advertisement
திருப்பூர்:பனியன் நிறுவனங்கள் இயங்க துவங்கியதால், சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த தொழிலாளர்கள், திருப்பூருக்குள் நுழைய முடியாமல், எல்லையில் பரிதவித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவு அமலாவதற்கு முன்பாகவே, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. மொத்தம், 41 இடங்களில் மாவட்ட எல்லை மூடப்பட்டு, போலீஸ் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.கடந்த, 42 நாட்களாக
 'தாழ் திறவாய்...!'திருப்பூருக்குள் நுழைய முடியாமல், எல்லையில் தொழிலாளர்கள் பரிதவிப்பு

திருப்பூர்:பனியன் நிறுவனங்கள் இயங்க துவங்கியதால், சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த தொழிலாளர்கள், திருப்பூருக்குள் நுழைய முடியாமல், எல்லையில் பரிதவித்து வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவு அமலாவதற்கு முன்பாகவே, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. மொத்தம், 41 இடங்களில் மாவட்ட எல்லை மூடப்பட்டு, போலீஸ் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த, 42 நாட்களாக முடங்கிக்கிடந்த தொழில்கள், 6ம் தேதி முதல், நிபந்தனை அனுமதியுடன் இயங்கி வருகின்றன.குறைந்தபட்ச தொழிலாளர்களை கொண்டு, கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி, நிறுவனங்கள் இயங்க துவங்கியுள்ளன. தகவல் அறிந்து, தொழிலாளர்கள் வேகமாக புறப்பட்டு வருகின்றனர். ஆனால், மாவட்ட எல்லைகளில், 'இ-பாஸ்' பெறாமல் வந்தால், திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
வாழ்வாதாரம் தேடி திருப்பூர் வரும் போது, மாவட்ட நிர்வாகம் தாழ் அடைக்க கூடாது. சம்பந்தப்பட்ட பனியன் நிறுவன உரிமையாளர்களிடம் வருகையை உறுதி செய்து கொண்டு, மாவட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்து வருவதால், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, பிறகு பணிக்கு அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம் கேட்டபோது, ''திருப்பூரில் வசிக்கும் தொழிலாளர், வெளியூர் சென்று திரும்பினால், மாவட்ட எல்லையில், மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே, அனுமதிக்கப்படுவர்,'' என்றார்.
பின்னலாடை தொழில் துறையினர் கூறியதாவது:ஏறத்தாழ, ஒன்றரை மாதங்களுக்கு பின், இப்போதுதான், லேசாக மூச்சு விட துவங்கியுள்ளோம். அதிலும், முதல் இடைஞ்சலாக, வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்கின்றனர். அவர்களுக்கு வேலை கொடுத்தாலும், ஊருக்கு செல்லும் மனநிலையிலேயே உள்ளனர்.
அடுத்து, தமிழக தொழிலாளர்கள், சொந்த ஊர்களிலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டுள்ளனர். ஆனால், நம் மாவட்ட எல்லையான வெள்ளகோவிலில், அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல், மூட்டை முடிச்சு, குடும்பத்துடன் வரும் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.எனவே, இது விஷயத்தில், மாவட்ட நிர்வாகத்தினர் தலையிட்டு, திருப்பூர் நோக்கி வரும் தொழிலாளர்களை மாவட்டத்துக்கும் அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X