பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ கழிவை வெளியேற்றுவதில் கவனம்: மாவட்ட நிர்வாகம் 'அட்வைஸ்'

Added : மே 14, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா பாதித்த நோயாளிகளின் கழிவுகளை, 24 மணி நேரத்துக்கு மேல் அனுமதிக்க கூடாதென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.தனிமைப்படுத்தப்பட்ட முகாம், வீட்டு கண்காணிப்பில் இருப்போர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், மருத்துவக்கழிவுகளை கையாளுவது குறித்து, மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
தனிமைப்படுத்திய மையங்கள், வீடுகள் மற்றும் வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்கள், மருத்துவக்கழிவுகளை தனித்தனியாக பராமரித்து, மஞ்சள் நிற பாலிதீன் பைகளில் சேகரித்து, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்ற துப்புரவு பணியாளர்களிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும்.வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், உபயோகித்த கையுறைகள், முககவசங்களை, அகற்றுவதற்கு முன்பு, 72 மணி நேரம் காகித பைகளில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பின், பொது கழிவுகளுடன் வெளியேற்றலாம். முக கவசங்களை, மீண்டும் பயன்படுத்திட முடியாதபடி, துண்டுகளாக வெட்டி, வெளியேற்ற வேண்டும்.
வீட்டின் பிற கழிவுகளுடன், கொரோனா பாதித்த நோயாளிகள் கழிவுகளை சேர்க்கவோ, சேமிக்கவோ கூடாது. மேலும், 24 மணி நேரத்துக்கு மேல், கொரோனா நோயாளிகளின் கழிவுகளை சேமித்து வைக்கவும் கூடாது. 'கோவிட்19' அறிகுறியுள்ள பணியாளர் பணிபுரியவும் அனுமதிக்க கூடாது.சர்வதேச பரவலாக மாறியுள்ள, 'கோவிட் -19' உயிர்க்கொல்லி வைரசிடம் இருந்து தப்பிக்க, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X