போயே போச்சு மாஸ்க் அணிதல் அலட்சியத்தால் தொற்று அபாயம்

Added : மே 14, 2020
Share
Advertisement

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் தற்போது வரை 44 பேர் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் குணமடைந்த நிலையில் 13 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக வெளியூரில் இருந்து வந்தவர்களால் தொற்று அதிகரித்து வருகிறது. பொதுமக்களோ அரசு அறிவித்த தளர்வில் பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமலும் மாஸ்க் அணியாமலும் பலர் சுற்றி திரிகின்றனர். பெரும்பாலான கடைகளில் சானிடைஸர்கள் போன்ற உபகரணங்கள் எதுவுமே இல்லை. பொருளாதார முடக்கத்தை கருத்தில் கொண்டே அரசு தளர்வுகளை அறிவித்தது. மாஸ்க் , சானிடைஸர் பயன்பாட்டை கட்டாயமாக்கியது. ஆனால் பெரும்பாலானோர் இதை பின்பற்றுவதில்லை .

மாவட்டத்தை பொறுத்த வரையில் வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் மாஸ்க்கை பெயரளவே பயன்படுத்துகின்றனர். கழுத்தில் இறக்கவிடுவதும், பாக்கெட்டில் மடித்து வைத்து
பயன்படுத்துவதுமாய் செய்கின்றனர். அரசு ஊழியர்கள், போலீசார் என பொறுப்பில் உள்ள சிலர் மாஸ்க் அணியாமல் உள்ளனர். மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம் குறித்து போதி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இவ்வாறு செய்வது வேதனைக்குரியதே.

கொரோனா தடுப்பு பணியில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது நம் கடமை. இதை
கண்காணித்து மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்வது அவசியம்.இல்லையேல் மேலும் தொற்று பரவலுக்கு ஆளாகும் நிலை மாவட்டத்தில் உருவாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X