பெண்ணிடம் கேலி, கிண்டல்

Added : மே 14, 2020
Share
Advertisement

நரசிம்மநாயக்கன்பாளையம்: அரிஜன் காலனியை சேர்ந்த பெண்ணை சிலர், கிண்டல் செய்தனர். தட்டிக்கேட்ட தாய்க்கு, கொலை மிரட்டல் விடுத்ததாக, சூர்யா உள்ளிட்ட நால்வர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்து, சூர்யாவின் உறவினர்கள், 30க்கும் மேற்பட்டோர் நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு நேரத்தில் மறியல் போராட்டம் நடத்தியதாக, அவர்கள் மீது பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.முன்னாள் மாணவர்கள் உதவிதுடியலூர்: என்.ஜி.ஜி.ஓ., காலனியில் உள்ள பிஷப் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியில், 2010ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவியர், 30 பேர் சேர்ந்து, அப்பகுதியில் வசிக்கும், 100 ஏழை குடும்பத்தினருக்கு 16 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினர். நிகழ்ச்சியில், அசோகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், வார்டு கவுன்சிலர் பிரேமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.காய்கறி வியாபாரிக்கு அடி உதைஇடிகரை: வெள்ளக்கிணறு வி.சி.வி., வீதியைச் சேர்ந்தவர் தமிழ்மணி. 29. இவர் இடிகரையில் தனது நண்பருடன் வேனில், காய்கறி வியாபாரம் செய்தார். அப்போது, தமிழ்மணிக்கும், அதே பகுதியை சேர்ந்த சதீஷ், மாணிக்கவாசகம் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சதீஷ் தரப்பினர், தமிழ்மணியை சரமாரியாக தாக்கினர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சதீஷ் உள்ளிட்ட, 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்பெ.நா.பாளையம்: ஊரடங்கு உத்தரவால், பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்ட, 200 குடும்பத்தினருக்கு பெரியநாயக்கன்பாளையம் லயன்ஸ் கிளப் தலைவர் லதா ஜெகநாதன், சால்சர் எலக்ட்ரானிக்ஸ் நிர்வாக இயக்குனர் துரைசாமி ஆகியோர் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினர்.முக கவசம் வினியோகம்நரசிம்மநாயக்கன்பாளையம்: நகர பா.ஜ., சார்பில், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் முக கவசம், கபசுர குடிநீர் உள்ளிட்டவற்றை, மாவட்ட செயலாளர் விவேகானந்தன், நகர நிர்வாகிகள் வேணுகோபால், யோகேஷ் உள்ளிட்டோர் வழங்கினர்.மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம்மேட்டுப்பாளையம்: காவல்துறை சார்பில் நகரில் உள்ள, 100 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை, போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திலக், பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.ஏழைகளுக்கு உதவிஇடிகரை: சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தின் இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட கோவிந்தநாயக்கன்பாளையம், இடிகரை, செங்காளிபாளையம், சென்னமநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம் பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 3,115 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் 6 வகையான காய்கறிகளை, சரவணம்பட்டி தி.மு.க., பகுதி கழக பொறுப்பாளர் பையாக்கவுண்டர் மற்றும் கட்சியினர் வீடு, வீடாக சென்று வழங்கினர்.சவர தொழிலாளர்களுக்கு நிவாரணம் மேட்டுப்பாளையம்: வருவாய்த்துறை சார்பில், 87 சவரத் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உட்பட நிவாரண பொருட்களை, கோவை வடக்கு ஆர்.டி.ஓ. சுரேஷ், மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி ஆகியோர் வழங்கினர்.மருத்துவ முகாமை அதிகாரி ஆய்வுகோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, துாய்மை பணியாளர்கள் மற்றும் பூ மார்க்கெட்டில் செயல்படும், 'அம்மா' உணவக பணியாளர்களுக்கு, ராமலிங்கம் காலனி பள்ளி வளாகத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. முகாம் ஏற்பாடுகளை, மண்டல உதவி கமிஷனர் செந்தில் அரசன், நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.நெசவாளர்களுக்கு உதவி மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், ராமசாமி பூண்டு மண்டி குடும்பத்தினர் சார்பாக, ஆலாங்கொம்பு, வீராசாமி நகர், தண்ணீர் தடம், சிறுமுகை, பகத்தூர், வெள்ளிக்குப்பம்பாளையம், மூலத்துறை திம் மராயம்பாளையம் ஆகிய கிராமங்களில், நலிவடைந்த, 500 கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு, தலா, ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.தி.மு.க., உதவி சிறுமுகை: இலுப்பநத்தம், இரும்பறை, சிக்கதாசம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில், 1,300 ஏழை குடும்பங்களுக்கு, காரமடை தி.மு.க., கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், நிவாரண பொருட்களை வழங்கினார்.அ.தி.மு.க., நிவாரணம்நரசிம்மநாயக்கன்பாளையம்: இப்பேரூராட்சிக்குட்பட்ட அ.தி.மு.க., சார்பில், நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், ராக்கிபாளையம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்து, 500 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், ரவை, மாவு, சர்க்கரை ஆகியவற்றை, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன் உள்ளிட்டோர் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X