தமிழ்நாடு

ரூ.500 கோடி பாக்கு வர்த்தகம் 'அம்போ': கைவிட்டு கிளம்பிய அசாம் தொழிலாளர்கள்

Updated : மே 14, 2020 | Added : மே 14, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
பேரூர்:'கொரோனா' அச்சம் காரணமாக, 'ஆப்பி' எனப்படும் கொட்டைப்பாக்கு உற்பத்தி கேள்விக்குறியாகி உள்ளது. ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்துார், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 1,979 எக்டர் பரப்பளவில் பாக்கு மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.இங்கு அறுவடையாகும் பாக்குகள் மட்டுமின்றி கேரளா, அசாம்
 ரூ.500 கோடி பாக்கு வர்த்தகம் 'அம்போ': கைவிட்டு கிளம்பிய அசாம் தொழிலாளர்கள்

பேரூர்:'கொரோனா' அச்சம் காரணமாக, 'ஆப்பி' எனப்படும் கொட்டைப்பாக்கு உற்பத்தி கேள்விக்குறியாகி உள்ளது. ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்துார், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 1,979 எக்டர் பரப்பளவில் பாக்கு மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இங்கு அறுவடையாகும் பாக்குகள் மட்டுமின்றி கேரளா, அசாம் மாநிலங்களில் இருந்தும் பச்சைப் பாக்குகள் கொள்முதலாகிறது. அவை தோலுரித்து வேக வைத்து, சாயமேற்றி 'ஆப்பி' எனப்படும் கொட்டைப்பாக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.இதில், நேர்முகமாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். தொண்டாமுத்துார் ஒன்றியத்தில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிசைத் தொழிலாக நடக்கிறது. இங்கு, அசாம் மாநிலத்தவர் மட்டும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தனர்.
இங்கு தயாரிக்கப்படும் பாக்கு ரகங்கள், கர்நாடக மாநிலம் சாம்ராட்டில் உள்ள 'கேம்கோ' நிறுவனத்துக்கு அதிகளவில் செல்கிறது. மீதம், உ.பி., டில்லி, பீஹார், குஜராத்தில் உள்ள பான்மசாலா நிறுவனங்களுக்கு விற்பனையாகிறது.இதன் வாயிலாக, ஆண்டுக்கு சராசரியாக, 500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்து வருகிறது. அடுத்த மாதம் சீசன் துவங்க உள்ளது.
இந்நிலையில், 'கொரோனா' காரணமாக அசாம் மாநிலத்தவர், சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால், பாக்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்போரை கொண்டு உற்பத்தி செய்தாலும், ஆர்டர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உற்பத்தியாளர் கலக்கம்
கொட்டை பாக்கு உற்பத்தியாளர் முத்துசாமி, 69, கூறுகையில், ''பாக்கு உற்பத்தி அடுத்த மாதம் துவங்கி, ஆறு மாதங்களுக்கு மட்டுமே நடைபெறும். பாக்கு தயாரிப்பில் கை தேர்ந்த அசாம் மாநிலத்தவர், ஊருக்கு கிளம்புவதால், தொழில் நடப்பது சிரமம் தான். இதனால், சீசன் சமயத்தில் ஆர்டர்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் போய்விட்டது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chidambaram - Chennai,இந்தியா
18-மே-202019:12:25 IST Report Abuse
chidambaram இப்பவாவது தமிழ்நாட்டுக்காரன் நம்ம நாட்டில் உழைத்து பிழைப்பான் என்று நம்பூகிறோம் சொந்த நாட்டில் கூலியை வாங்கி சாப்பிடுங்க Kerelaவில் தமிழ்நாட்டுக்கான பாண்டி என்று கேவலப்படுகிறோம் ஆனால் சொந்த நாட்டில் வேலை செய்ய யோசிக்கிறோம் . இந்த கொரோனா ஒரு பாடமாக கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இருக்கட்டும்
Rate this:
Cancel
prakash - Bangalore,இந்தியா
18-மே-202013:27:28 IST Report Abuse
prakash வடநாட்டான், பானிபூரிகாரன் என்று ஏளனம் செய்தோம். இப்போது அவர்கள் போய்விட்டார்கள் என்று புலம்புகிறோம். பாக்கு தொழில் ஒன்றில் மட்டும் இந்த நிலை என்றால் கட்டுமானம் சாலைப்பணிகள் என்று மற்ற பணிகளில் இன்னும் என்ன பிரச்சனை வருமோ?
Rate this:
Cancel
Dasa - Singapore,சிங்கப்பூர்
18-மே-202012:59:41 IST Report Abuse
Dasa இத பவுடரா அரைத்து சாண எரிவாயு கலனில், பச்சை இலைதழைகளுடன் கலந்து விட்டால், நல்ல எரிவாயு மகசூல் கிடைக்கும். முயற்ச்சித்து பாருங்கள். சோற் விக்காட்டா சுண்டகஞ்சின்ர மாதிரி, வேறு பயன்பாடுகளை கண்டரியவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X