கண்காணிப்பு இன்றி குற்ற செயல்கள் சிரமத்தின் பிடியில் தென்றல் நகர் பகுதி

Added : மே 14, 2020
Share
Advertisement

ராஜபாளையம்:ராஜபாளையம்தாலுகா அலுவலகம் தென்றல் நகர் முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வரை குடியிருப்பு பகுதிகளில் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு பஞ்சமில்லை.
இதற்கு கண்காணிப்பு குறைபாடே காரணமாக இருந்து வருகிறது.

24 மணி நேரமும் தொடர் கவனிப்பு என்பது சாத்தியமாக இல்லாத நிலையில்தொடர்
குற்றச்செயல்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளால் பொது மக்கள் அவதிக்குஉள்ளாகின்றனர். தென்றல் நகர் , சோமையாபுரம் பகுதிகளில் அமைக்கப்பட்ட செக்போஸ்ட்களும் பெயரளவிற்கே உள்ளன.

இதை தடு முடங்கியாறு ரோடு நாடார்மெட்ரிக்., பள்ளி முதல் சுந்தர்ராஜபுரம் செல்லும் பாதை , தனியார் மூலிகை பண்ணையில் இருந்து தென்றல் நகருக்கு பிரியும் பாதை , செண்பகத்தோப்பு ரோடு விலக்கு போன்ற பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தி இப்பகுதிகளை கண்காணிப்பில் கொண்டு வரநடவடிக்கை மேற்கொள்ளலாம். இதன் மூலம் குற்றநடவடிக்கையில்
ஈடுபடுபவர்களை சுலபமாக அடையாளம் கண்டு கட்டுப்படுத்த முடியும்.இதற்கு போலீசார் நடவடிக்கை அவசியமாகிறது.


சாதகமாகி விடுகிறது

செண்பகத்தோப்பு ரோட்டையொட்டிய குடியிருப்பு பகுதியில் குற்றச்செயல்களில்
ஈடுபடுபவர்கள் சமத்துவபுரம் குடியிருப்புகளில்மறைந்து கொள்கின்றனர்.மக்களும் புகார் கூற தயங்குவது இவர்களுக்கு சாதகமாகி விடுகிறது. சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பை பலப்படுத்தலாம்.

தினகரன், தொழிலாளி.

மக்களுக்கு பாதுகாப்பில்லை

இப்பகுதி இளைஞர்கள் பலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இங்கு முழு நேர கண்காணிப்பை உறுதிப்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம்
உடனடி நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும்.

கதிர்வேல், முன்னாள் ராணுவ வீரர்.

இருளால் வாய்ப்பு

தாலுகா அலுவலகத்திலிருந்து தென்றல் நகர் ரோட்டில் பொது மக்கள் அதிக நடமாட்டம்
இருந்தும் போதிய அளவு மின் விளக்குவசதியில்லை.அப்படியே பொருத்தினாலும் சமூக விரோத செயல்களுக்காக உடைக்கப்படுவதும் சாதாரணமாக உள்ளது. மின் விளக்குகளை எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமுருகன், எல்.ஐ.சி. முகவர்.

கண்காணிக்கப்படுகிறது

முடங்கியாறு, தென்றல் நகர் பகுதிகளில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க முழு
கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.இது தவிர முடங்கியாறு ரோடு உள்ளிட்ட பகுதி
வனத்துறையின் கட்டுப்பாட்டில் வந்து விடுவதால் அவர்களின் ஒத்துழைப்பும் ஸ்பான்சர்கள் பங்களிப்பும் இருந்தால் சிசிடிவிகேமரா பொருத்தப்பட்டு இப்பகுதிகள் முழு நேரம்
கண்காணிக்கப்படும்.

நாகஷங்கர், டி.எஸ்.பி., ராஜபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X