சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகன விபத்து: ரேஞ்சர் மீது வழக்கு

Added : மே 14, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில், பைக் மீது ஜீப் மோதிய விபத்தில், இருவர் காயமடைந்தனர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவை தொப்பம்பட்டி கதிர் நாயக்கன்பாளையத்தை சேர்ந்த மாரிசாமி மகன் அசோக்குமார், 29, மானாமதுரை குருசாமி மகன் முருகேசன், 25. இருவரும் மேட்டுப்பாளையம் நகரில், மருந்து கடையில் வேலை பார்த்து வருகின்றனர்.நேற்றுமுன்தினம் மாலை, வேலை முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில், வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். காரமடை சாலையில் கே.கே. நகர் செல்ல வளைவில் திரும்பும் போது, அவ்வழியாக வந்த மேட்டுப்பாளையம் வனத்துறை ஜீப் மோதியதில், இருவர் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இருவரும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார், வனத்துறை ஜீப்பை ஓட்டி வந்த, வனச்சரக அலுவலர் செல்வராஜ் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X