பொது செய்தி

தமிழ்நாடு

அரசு துறைகளில் வழக்கமான பணிகள் மறுபடியும் துவக்கம்

Added : மே 14, 2020
Share
Advertisement

கோவை:மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் வழக்கமான பணிகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், களப்பணிகள் மட்டும் தற்காலிகமாக தவிர்க்கப்பட்டுள்ளன.சமூக நலத்துறை வாயிலாக, தாலிக்கு தங்கம், இரண்டு பெண் குழந்தைகள் திட்டம், திருநங்கைகளுக்கு உதவித்திட்டம் என பல்வேறு உதவித்திட்டங்கள், பொதுமக்களுக்கு வந்தடைகிறது. கொரோனா பாதிப்பால், அனைத்து துறைகளிலும், கொரோனா தடுப்பு பணி மட்டுமே நடந்தது.கோவையில் பாதிப்புகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் ஊரக வளர்ச்சி, சமூகநலத்துறை, வருவாய்துறை, தமிழ் வளர்ச்சித்துறை என அனைத்து துறைகளிலும், வழக்கமான பணிகள் துவங்கியுள்ளன.சமூகநலத்துறை அதிகாரி தங்கமணியிடம் கேட்டபோது, ''கொரோனா தடுப்பு பணிகளாக விடுதிகள், முதியோர் இல்லங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர, வழக்கமான பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக, சமீபத்தில் எந்த திட்டங்களின் கீழும், புதிய விண்ணப்பங்கள் வரவில்லை.பழைய விண்ணப்பங்கள் போதுமான அளவு உள்ளதால், அப்பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.கொரோனா காரணமாக, நேரடியாக வீடுகளுக்கு சென்று, ஆய்வு செய்யும் களப்பணிகளை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.சமூக நலத்துறையின் கீழ், அவசியம் உள்ள பயனாளிகள் விண்ணப்பங்களை அந்தந்த பகுதி அலுவலர்களிடம் சமூக இடைவெளி, முககவசம் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி சமர்ப்பிக்கலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X