பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப்பொருட்கள்

Added : மே 14, 2020
Share
Advertisement
 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப்பொருட்கள்

தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் சுற்றுவட்டாரத்தில் உள்ள, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 50 மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி, தொண்டாமுத்துாரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சந்திரசேகர், 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, அரிசி, மளிகை பொருட்கள், கையுறை, முக கவசம் உள்ளிட்ட, பாதுகாப்பு உபகரண தொகுப்புகள், 'வாட்டர் பெட்' உள்ளிட்டவற்றை வழங்கினார்.சந்திரசேகர் கூறுகையில், "கோவை மாவட்டத்தில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில், உதவி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கோவை மாவட்டத்தில், 700 மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு உபகரண தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தொண்டாமுத்துார் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, பாதுகாப்பு உபகரணம் தொகுப்பு வழங்கப்பட்டது," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X