வி.ஏ.ஓ., அலுவலகங்களில் காத்திருக்கும் தொழிலாளர்கள்

Added : மே 14, 2020
Share
Advertisement

அன்னுார்:அன்னுார் தாலுகாவில், வி.ஏ.ஓ., அலுவலகங்களின் முன்பு, வட மாநில தொழிலாளர்கள் தினமும் காத்திருக்கின்றனர்.அன்னுார் தாலுகாவில், வட மாநிலங்களைச் சேர்ந்த, 9,300 தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா அச்சம் காரணமாகவும், தொழிற்சாலைகளில் சரியாக வேலை இல்லாததாலும், சொந்த ஊருக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர்.தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அலுவலகத்தில், ஆதார் நகலை சமர்ப்பித்து, முகவரியை பதிவு செய்துள்ளனர். பதிவு செய்து ஒரு மாதம் ஆகியும், தங்களுக்கு அழைப்பு வராததால், மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். பஸ் வசதி இல்லாததால், ஏழு, எட்டு கி.மீ., தொலைவிலிருந்து, கொளுத்தும் வெயிலில் நடந்து வந்து, வி.ஏ.ஓ., அலுவலகங்களில் காத்து நிற்கின்றனர். சிலர் தாலுகா அலுவலகத்திற்கு வந்து விசாரித்து செல்கின்றனர்.'ஒரு வாரத்திற்குள், பதிவு செய்த அனைவரும், சொந்த ஊருக்கு, அனுப்பப்படுவார்கள்' என, வருவாய்த் துறையினர் சமாதானம் தெரிவித்து அனுப்பி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X