ரெடிமேட் ஆடை தயாரிப்பை முடக்கியது கொரோனா: வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

Added : மே 14, 2020
Share
Advertisement
 ரெடிமேட் ஆடை தயாரிப்பை முடக்கியது கொரோனா: வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

போடி,:தேனிமாவட்டத்தில் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பில் தொழில் நகரமாக விளங்கி வரும் போடி ரெங்கநாதபுரத்தில் கொரோனா ஊரடங்கால் உற்பத்தி முடங்கியுள்ளது. இதனை நம்பி இருந்த 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

ரெங்கநாதபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பலர் 15 ஆண்டுகளுக்கு முன் தலைச்சுமை, சைக்கிள், கார் மூலம் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். காலப்போக்கில் சூரத், பெங்களூரு, மங்களூரு, மதுரை ஆகிய பகுதிகளில் துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்து தரம் பிரித்து குழந்தைகள் முதல் பெரியோர் வரை சுடிதார், மிடி, பேண்ட்,சர்ட், கவுன், பட்டு பாவாடை, வேட்டி, சட்டை உள்ளிட்ட ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் தொழிலை சொந்தமாக துவக்கினர்.

இதை நம்பி 400 க்கும் மேற்பட்ட ரெடிமேட் ஆடை உற்பத்தியாளர் குடும்பங்கள், போடி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், பத்ரகாளிபுரம், விசுவாசபுரம், மேலச்சொக்கநாதபுரம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் ஆயிரத்தி 200 க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள், 500 க்கும் மேற்பட்ட சிறுவியாபாரிகள் உள்ளனர்.ரெடிமேட் ஆடை தயாரிப்பு தகுந்தபடி தினந்தோறும் பெண்கள் ரூ.250 முதல் ரூ. 300 வரையிலும், ஆண்கள் ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், கட்டிங் மாஸ்டர்கள் ரூ.500 முதல் ரூ. 600 வரை சம்பளம் பெறுவர்.

தயாரிக்கப்படும் ரெடிமேட் ஆடைகள் கடலோரப் பகுதியான திருவனந்தபுரம், கொச்சி போன்ற கேரள பகுதிகளுக்கும், தமிழகத்தில் கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, காஞ்சிபுரம், ராமநாதபுரத்திற்கும் மற்றும் கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். தற்போது கொரோனா நீண்ட ஊரடங்கு காரணமாக ரெடிமேட் ஆடைகள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந்துள்ளது. மூலப்பொருட்கள் வராததால் உற்பத்தியை தொடர வழியின்றி முடங்கியுள்ளது.இதனால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

தொழில் முனைவோர் கூறியதாவது:

நிதி முடக்கம்

என்.எம். முருகதாஸ்: ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு பணியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளோம். மதுரை, சூரத் பகுதிகளில் உள்ள மில் மற்றும் ஜவுளி கடைகளில் துணிகளை கிலோ கணக்கில் குறைந்த விலைக்கு வாங்கி தரம் பிரித்து ரெடிமேட் ஆடைகள் தயாரித்து ரூ.100 முதல் ரூ. 500 வரை குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்.

கொரோனாவால் கோயில்களில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. ரம்ஜான் பண்டிகை காலத்தில் உற்பத்தி செய்த ஆடைகளை விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளது. ஊரடங்கால் தொழிலாளர்கள், சிறுவியாபாரிகளுக்கு வேலை இழப்பு ஏறப்டதோடு, உற்பத்தியாளர்கள் நிதி முடக்கத்தால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

நிவாரணம்எஸ்.குமார்: இத்தொழிலை மட்டுமே நம்பி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஊரடங்கால் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தயாரிக்கப்பட்ட ரெடிமேட் ஆடைகள் தேங்கியுள்ளன. இதனை நம்பியிருந்த குடும்பத்திற்கு சராசரியாக தினமும் ரூ.500 முதல் ரூ.800 வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. நிவாரணம் வழங்கி ரெடிமேட் ஆடை உற்பத்தி செய்யும் தொழிலை மேம்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X