மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி

Added : மே 14, 2020
Share

மேட்டுப்பாளையம்:காரமடை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மிகவும் பின்தங்கிய மாணவர்களின் குடும்பங்களுக்கு, நிவாரணப் பொருட்களும், பண உதவியும் செய்து வருகின்றனர்.காரமடை, வெள்ளியங்காடு அருகே உள்ள சுண்டக்கரைப்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் கருப்புசாமி. இவர் குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை, பள்ளியில் படிக்கும் ஏழை எளிய, 20 மாணவர்களின் குடும்பத்திற்கு வழங்கினார்.இதே போல், சிறுமுகை அடுத்த மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பரமேஸ்வரன், முகநூல் நண்பர்களின் உதவியுடன், 2.20 லட்சம் ரூபாய் சேகரித்து மூலத்துறை, காந்தவயல், புதுக்காடு ஆகிய நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும், 302 மாணவர்களுக்கு வழங்கினார்.மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு தலா, ஆயிரம் ரூபாயும், பின்தங்கிய மாணவர்களுக்கு, 500 ரூபாயும் வழங்கியுள்ளனர். ஆசிரியர்களின் இந்த சேவையை பிற ஆசிரியர்களும். பொதுமக்களும் பாராட்டியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X