சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி பயணம்; தடுத்து நிறுத்திய போலீசார்

Added : மே 14, 2020
Share
Advertisement
 அனுமதியின்றி பயணம்; தடுத்து நிறுத்திய போலீசார்

பெ.நா.பாளையம்;துடியலுாரில் இருந்து உரிய அனுமதியின்றி, பீகார் செல்ல முயன்ற, 30 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.துடியலுார் இடிகரை ரோட்டில் தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பீகாரைச் சேர்ந்த, 150 இளைஞர்கள் பணியாற்றி வந்தனர். ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, பீகார் செல்ல, 150 பேர் விண்ணப்பித்தனர். இதில், 120 பேருக்கு மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதி கிடைத்தது.ஆனால், நேற்று காலை, 150 பேரும் துடியலுாரில் இருந்து நடந்தே, கோவை செல்ல முற்பட்டனர். இதை அறிந்த துடியலுார் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் மற்றும் போலீசார், இளைஞர்களை துடியலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே தடுத்து நிறுத்தினர்.அரசு அனுமதித்த, 120 நபர்கள் மட்டுமே பீகார் செல்ல முடியும். மீதமுள்ள, 30 பேருக்கு ஓரிரு நாளில் அனுமதி கிடைத்த பின், அவர்கள் புறப்பட்டு செல்லலாம் என, அறிவுறுத்தினர்.அனைவரும் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். துடியலுார் போலீசார் மதிய உணவு வழங்கினர். பின்னர், 120 பேர் மட்டும் பீகார் செல்ல, கோவைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X