வெயில் தாக்கத்தால் முருங்கை மரம் பாதிப்பு 

Added : மே 14, 2020
Share
Advertisement
 வெயில் தாக்கத்தால் முருங்கை மரம் பாதிப்பு 

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் முருங்கை மரங்கள் பாதிப்படைந்துள்ளன.

இப்பகுதியில் மொட்டனுாத்து, ஒக்கரைப்பட்டி, எரதிமக்காள்பட்டி, ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி, கண்டமனுார் உட்பட பல கிராமங்களில் மானாவாரி, இறவையில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் முருங்கை சாகுபடி உள்ளது. அதிக மழை, காற்று இவற்றால் முருங்கை மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும். கோடையில்காய்ப்பு அதிகம் இருக்கும். சில மாதங்களாக ஆண்டிபட்டியில் மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மரங்களில் பூக்கள், இலைகள் உதிர்ந்து காய்ப்புத்தன்மை பாதிப்படைகிறது.

விவசாயிகள் கூறியதாவது: இறவை பாசன நிலங்களில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து விட்டது. மானாவாரியாக வளர்ந்துள்ள மரங்கள் மழை இன்றி காய்ப்பு குறைந்து விட்டது. கொரோனா ஊரடங்கால் விளைந்த காய்களை அனுப்புவதிலும் சிரமம் உள்ளது. கோடை மழை கைகொடுத்தால் இன்னும் சில மாதங்களுக்கு முருங்கை காய்ப்பு இருக்கும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X