சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொந்த ஊருக்கு அனுப்ப கோரி திரண்ட வடமாநில இளைஞர்கள்

Added : மே 14, 2020
Share
Advertisement
 சொந்த ஊருக்கு அனுப்ப கோரி திரண்ட வடமாநில இளைஞர்கள்

கோவை;கோவை உப்பிலிபாளையம் வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு நுாற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் திரண்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.வடமாநில தொழிலாளர்கள் படிப்படியாக, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களில் அனுப்பப்பட்டு வருகின்றனர். இதனை அறிந்த சிங்காநல்லுார், உப்பிலிபாளையம், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பகுதிகளில் வசிக்கும், வடமாநிலத்தவர் தங்களுக்கும் வாய்ப்பு வழங்குமாறு, கேட்டு வருகின்றனர்.போலீசார் அறிவுறுத்தலின் படி, உப்பிலிபாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக வந்து சென்றுள்ளனர். அதிகாரிகளை சந்திக்க முடியாமல் போனதால், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று அதிகாலை முதலே, வி.ஏ.ஓ., அலுவலகம் முன் திரண்டு, அங்கேயே அமர்ந்து கொண்டனர். போலீசார், தொழிலாளர்களுடன் பேச்சு நடத்தினர். அனைவரும் தாங்கள் தங்கியிருந்த இடங்களை காலி செய்து வந்ததால், அருகிலுள்ள தனியார் கல்யாண மண்டபங்களுக்கு, தனியார் பேருந்தில் அழைத்துச்செல்லப்பட்டனர்.இவர்களது விபரங்கள், மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சொந்த மாநிலம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X