பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1.50 லட்சம் நாற்று விற்பனைக்கு தயார்

Added : மே 14, 2020
Share
Advertisement
 ரூ.1.50 லட்சம் நாற்று  விற்பனைக்கு தயார்

மேட்டுப்பாளையம்:கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில், 1.50 லட்சம் மரம் மற்றும் செடிகளின் நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.பண்ணை மேலாளர் ஹரிபாஸ்கர் கூறியதாவது:பண்ணையில் மங்குஸ்தான், பலாப்பழம் ஆகிய பழ மரங்களும், இலவம்பஞ்சு மரங்களும் அதிக அளவில் உள்ளன. ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தரமான நாற்றுகள் உற்பத்தி செய்து, மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப் படுகின்றன. பண்ணையில் பாக்கு, 87 ஆயிரம் நாற்றுகள், மிளகு, 43 ஆயிரம், காபி, 12 ஆயிரம், சில்வர் ஓக், 10 ஆயிரம், ஜாதிக்காய், லிச்சி, பம்பளிமாஸ் ஆகிய நாற்றுகள் தலா, 2,000, கொடம்புளி, 2,600, எலுமிச்சை, 1,000, கிராம்பு, 300 ரம்புட்டான்,400, முட்டை பலா, 500 என, 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட நாற்றுகள், விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.மொத்தமாகவும், சில்லரையாகவும் நாற்று தேவைப்படுவோர், 85084 82021 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X