சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வயிற்றில் ஈரத்துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Added : மே 14, 2020
Share
Advertisement

கோவை:அரசு வேலையில் ஓய்வு பெறும் வயது உயர்வை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கோவையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசு ஓய்வு பெறும் வயதை, 58லிருந்து 59 வயதாக உயர்த்தி அறிவித்துள்ளது. இதே போன்று, மத்திய அரசு வேலை நேரத்தை, 8 மணி நேரம் என்பதை, 12 மணி நேரமாக உயர்த்த முடிவெடுத்துள்ளது.மத்திய, மாநில அரசின் இந்நடவடிக்கையால், அரசு வேலைக்கு காத்திருக்கும் பல இளைஞர்கள், பாதிக்கப்படுவார்கள் என்பதை ஆர்ப்பாட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.கோவையில், பார்க் வீதி, ஆர்.ஜி.புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வயிற்றில் ஈரத்துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X