வெளியூரில் இருந்து வருவோரை கண்காணிக்க உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளியூரில் இருந்து வருவோரை கண்காணிக்க உத்தரவு

Added : மே 14, 2020
Share

கோவை:'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பு பணிக்கு, கோவை மாநகராட்சிக்கு கூடுதலாக நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவின் ஆய்வு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.கனிம வளத்துறை இயக்குனர் சரவணவேல்ராஜ், 'சிட்கோ' மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தார். துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், 'தனிமைப்படுத்திய பகுதிகளில் தினமும் மூன்று முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அனைவரும் முக கவசம் அணிவதை கண்காணித்து, உறுதி செய்ய வேண்டும்.வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தி, கண்காணிக்க வேண்டும். மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில் நோய் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சிறப்பு குழுவினர் அறிவுறுத்தினர்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ.,கள் காந்திமதி, கலைவாணி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ்குமார், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா, டி.எஸ்.பி., பிரேமானந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X