சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடைப்பட்டியில் 200 பேருக்கு பரிசோதனை

Added : மே 14, 2020
Share
Advertisement
 ஓடைப்பட்டியில் 200 பேருக்கு  பரிசோதனை

சின்னமனுார்:ஓடைப்பட்டி பேரூராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 6 பேர் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும், ஒருவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கிருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சரக்கு வாகனம் ஓட்டி சென்ற 31 பேர் போடி அரசு பொறியியல் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தொடர்பிலிருந்தவர்கள் 200 பேருக்கு 'ஸ்வாப்'(சளி) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளியூர் நபர்கள் நுழைவதை தடுக்க புறவழி சாலைகளில் முட்களை வெட்டி போட்டு கிராமத்தினர் அடைத்து வைத்துள்ளனர்.

இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்காங்கல்பட்டி, மூர்த்திநாயக்கன்பட்டியில் கடைகள் திறக்க நிர்வாகம் தடை விதித்துள்ளது.தேவதானப்பட்டி: தேவதானப்பட்டியைச் சேர்ந்த 55 வயதுடைய ஆண் குஜராத்தில் இருந்து ஊருக்கு வந்த போது கொரானா உறுதி செய்யப்பட்டது. இதனால் இப்பேரூராட்சியில் 2,3,7,8, 14 ஆகிய வார்டுகள் புதிய நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப் பட்டது.

தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரப்பணியாளர்கள் தொற்று பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த 30 பேரிடம் கொரானா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுத்து தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X